கோடைகாலம்
திருப்பூரின் முதல் கோடை காலம் எனக்கு. கன்னி கோடை என்று சொல்லலாமா ! வேண்டாம். அது என்னை கெட்ட வார்த்தையில் திட்டுவது போல வாடி வதற்றி கொண்டு இருக்கிறது. கடந்த 20 வருடத்திற்க்கு மேலாக சென்னை வாழ்க்கை. இப்போது திருப்பூர் வேலை மாற்றம். திருப்பூரின் காலநிலை கொஞ்சம் வித்தியாசமாக தான் இருக்கிறது. மார்ச்சின் ஆரம்பம் முதலே கோடையின் வெப்பம் தகிக்கிறது. அடிக்கும் காற்று கூட வெப்பத்தை தாங்கி கொண்டு தான் வருகிறது. உடல் இந்த வெப்பத்தை எதிர்க்கிறது மனம் எந்த செயலிலும் கவனம் கொள்ள மாட்டேங்கிறது. இன்னும் ஏப்ரல் , மே கடக்க வேண்டும் . Greenday யின் பாடலான Wake me when September Ends போல இந்த கோடை முடிந்ததும் நான் எழுந்து கொள்ளலாமா என பார்க்கிறேன்.
Wake me up when September ends
Comments
Post a Comment